Skip to main content

மரங்களுக்கு பிறந்தாள் கொண்டாடிய மரங்களின் காதலர்கள்

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ந்தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் வீடுகள், மரங்கள், செடி, கொடி, படகு என்று அத்தனையும் அழித்துவிட்து. அதில் பாதிக்கப்பட்ட அனைவரும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். கோடிக்கணக்கில் அழிந்த மரங்களால் இன்று மழையும் இல்லை. வெயிலின் தாக்கமும் அதிகமாக உள்ளது. அதனால் தற்போது  திருமணம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இளைஞர்கள் பொது இடங்களில் மரக்கன்று நட்டு வளர்த்து வருகின்றனர்.

 

t


 
இந்த நிலையில் தான் தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தில் மரங்களுக்கு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்கள் மரங்களின் காதலர்கள்.   ஆம்.. இயற்கை ஆர்வலரான ஜீவானந்தம் மரங்கள் மீது ஆர்வம் கொண்டதால் பல்வேறு பகுதியில் இளைஞர்கள், மக்களுடன் இணைந்து ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகிறார். இப்படித்தான் தம்பிக்கோட்டை முக்கூட்டுசாலை அருகே சாலையோரத்தில் கடந்த ஆண்டு மே. 6 ந் தேதி  இரண்டு செர்ரி மரக்கன்றுகள் நட்டதுடன் அதனை தானே தண்ணீர் ஊற்றி பாதுக்காத்து வந்தார். 

 

t

 

இதில் கடந்த நவம்பர் 16 ந்தேதி ஏற்பட்ட கஜா புயலின் கோரதாண்டவத்தில் அருகில் இருந்த ஏராளமான மரங்கள் அடியோடு சாய்ந்தாலும் அந்த இரண்டு செர்ரி மரக்கன்றுகளும் புயலுக்கு தப்பியது. தப்பிய மரங்களைப் பார்த்து ஜீவானந்தமும் கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். 


புயலுக்கு தப்பிய இந்த இரண்டு மரக்கன்றுகளும் நடப்பட்டு ஒரு வருடம் முடியும் நிலையில் மரக்கன்றகளுக்கு பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்தனர். மேலும் இந்த பிறந்த நாள் என்பது இளைஞர்களை மேலும் மரக்கன்றுகள் நட ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பதாலும் மரங்களை வண்ண மின் விளக்குகளால் அலங்கரித்து குழந்தைகளை அழைத்து கேக் வெட்ட செய்து. விருந்தினர்களை அழைத்து வருந்து கொடுத்து கூடவே மரக்கன்றுகளையும் கொடுத்தனர். 


மரங்களின் பிறந்த நிகழ்ச்சிக்கு இயற்கை ஆர்வலர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். கிராம முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.  தொடர்ந்து மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வரும் கீழக்காடு கார்த்தி, வடகாடு சுரேஷ், ஜாம்புவானோடை ராஜாஜி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இதில் பல்வேறு அமைப்பினர்கள் ஏராளமான  கிராம மக்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். 

 

t


     இதுகுறித்து இயற்கை ஆர்வலர் ஜீவானந்தம்..  நான் பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன் இப்பகுதியில் கஜா புயலால் முற்றிலும் மரங்கள் அழிந்து விட்டது இதனை பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்றால் இப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுகள் வீதம் வளர்த்தால் தான் பழைய நிலைக்கு இயற்க்கை வளம் கிடைக்கும் அதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் இன்று நான் ஓராண்டாக பராமரித்து வளர்த்து வந்த இந்த மரக்கன்றுகளுக்கு கிராம மக்களுடன் இணைந்து பிறந்தாள் விழா கொண்டாடினோம். இதுபோன்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த பல்வேறு திட்டங்களை திட்டமிட்டு உள்ளேன் என்றார்.


    சபாஷ் மரங்களின் காதலர்களே.. 
மரங்களை வளர்க்க எத்தனை வழிகள் உள்ளதே அத்தனை வழிகளையும் கையாளுகிறார்கள் இளைஞர்கள். விரைவில் கஜாவால் அழிக்கப்பட்ட அத்தனை கோடி மரங்களையும் வளர்த்து எடுப்போம் என்ற சபதம் அந்த இளைஞர்களின் செயலில் தெரிகிறது. 
            

சார்ந்த செய்திகள்