Skip to main content

அணில் சேமியாவில் தவளை; உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

 Frog in anil Semia-Authors study

 

அணில் சேமியா பாக்கெட்டில் தவளை ஒன்று இறந்து கிடந்ததாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகத்திற்கு புகார் சென்ற நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் விற்பனை செய்யப்பட்ட சேமியா பாக்கெட்டில், இறந்த நிலையில் தவளை ஒன்று கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பூமிநாதன் என்பவர் உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல்லில் உள்ள அணில் சேமியா நிறுவனத்திற்குச் சொந்தமான 7 உற்பத்தி கூடங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கிருந்த சேமியா மாதிரிகளைக் கைப்பற்றி சென்னை கிண்டியில் உள்ள உணவுப் பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருப்பில் உள்ள சேமியா பாக்கெட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என அதிரடியாக உத்தரவிட்டனர். பிரபல நிறுவனத்தின் சேமியா பாக்கெட்டில் தவளை இருந்ததாகக் கொடுக்கப்பட்ட புகாரில், உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய சோதனை அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்