Skip to main content

நெல் கொள்முதல் நிலையம் திறக்ககோரி விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில், தமிழக அரசால்  திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் கடந்த 15 வருடங்களாக இயங்கி வந்தது. இந்நிலையத்தில்  சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நெல் அறுவடை காலங்களில் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகளுக்கு மேல் விவசாயிகள் கொள்முதல் செய்து வந்தனர்.  இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர், தனக்கு சொந்தமானதாக கோவில் உள்ளதால் அதனருகே  நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் பல்லாயிரம் நெல் மூட்டைகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 

 

former's protest in Cuddalore

 

இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தபோது மாற்று இடத்தில் கொள்முதல் நிலையம் அமைத்து தருகிறோம் என்று கூறியதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால் மாற்று இடத்தில் கொள்முதல் நிலையம் அமைத்தால், நெல் மூட்டை ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் வாடகை தர வேண்டும் என்பதால், அரசுக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்த கொள்முதல் நிலையத்தை வேறு இடத்தில் மாற்ற கூடாது என்று  100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், கொள்முதல் நிலையம் அமைக்காமல் தடுத்து நிறுத்தும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அடையாள உண்ணாவிரதத்தை தொடங்கினர். ஆனால் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்தாததால்  காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டமாக மாற்றி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்