Skip to main content

சென்னை ரயில் விபத்தில் 5 பேர் பலியான பரிதாபம்- அதிகாரிகள் மீது பயணிகள் ஆவேசம்

Published on 24/07/2018 | Edited on 24/07/2018
train

 

பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்லுவோரின் எண்ணிக்கையினால் சென்னையில் ரயில்களில் வழக்கமாக கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.   காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுவாகவே கூட்ட நெருக்கடி இருக்கும்.   இந்நிலையில் வழக்கமாக வரும் ரயில் கொஞ்சம் தாமதம் ஆனால் கூட பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள்.  

 

இப்படி இருக்கும்போது இன்று கோடம்பாக்கத்தில் மின் வயர் அறுந்து விழுந்ததால் புறநகர் ரயில்கள் இயக்குவதில் தாமதாம் ஆனது.   இந்த சமயத்தில் சென்னை எழும்பூரில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் கூட்ட நெருக்கடி அதிகமாக இருந்தது.   பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும்.  காத்திருந்த பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏற முற்பட்டனர்.   இதில் பலர்  படுகாயம் அடைந்தனர்.   மேலும் பலர் ரயிலில் உள்ளே செல்ல இடம் இல்லாததால் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்றனர்.  ரயில் புறப்பட்டதும்  படிக்கட்டில் தொங்கிக்கொண்டிருந்தவர்கள் தடுப்புச்சுவற்றில் மோதினர்.  இதில் 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.  படுகாயம் அடைந்தோர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று இரவும் இதே கூட்ட நெருக்கடியால் இதே இடத்தில் 2 பேர் பலியானார்கள்

 

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரயில் இயக்காமல் இருந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் இத்தனை உயிர்கள் பறிபோய்விட்டதாக சக பயணிகள் அதிகாரிகள் மீது ஆவேசமாக கூறினார்கள்.    
 

சார்ந்த செய்திகள்