Published on 16/09/2020 | Edited on 16/09/2020
திரைப்பட இயக்குனர் பாபு சிவன் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார்.
மறைந்த பாபு சிவன் விஜய்-அனுஷ்கா நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படத்தை இயக்கி உள்ளார். அதேபோல் பாபுசிவன் விஜய்-திரிஷா நடிப்பில், தரணி இயக்கிய 'குருவி' திரைப்படத்தின் வசனங்களையும் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.