Skip to main content

திருவாருரில் தண்ணீர் கேட்டு அக்னி சட்டி ஏந்தி விவசாயிகள் போராட்டம்!!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

 

 Farmers fight for fire on water in Tiruvarur

 

திருவாரூரில் சம்பா சாகுபடி தண்ணீர் கேட்டு விவசாயிகள் தீச்சட்டி ஏந்தியபடி ஊர்வலமாக சென்று ஆர்பபாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தண்ணீீர் தாமதமாக திறக்கப்பட்டாலும் மேட்டூர் அணை  நிறம்பியதால்  டெல்டா விவசாயிகள் தீவிர விவசாயத்தில் ஈடுபட்டனர்.  ஆனால் தண்ணீர் வராமல் பயிர்கள் கருகிக் கொண்டிருக்கிறது. ஆத்திரம் அடைந்த விவசாயிகள் அடுத்தடுத்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 

அந்த வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளவாங்கார்குடி ஊராட்சி பகுதியில்  பயிரிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் சம்பா பயிர்கள் கருகி வருகிறது. சம்பா பயிர்களை காப்பாற்ற  தண்ணீர் வழங்கவேண்டும் என விவசாயிகள் ஆட்சியிரிடம் மனு அளித்தனர். 

 

அந்த மனுவில் " தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பா பயிர்களை காப்பாற்றுவது மிகவும் கடுமான ஒன்று என்பதால் குறைந்த வயதுடைய விதைகளையும், நிபந்தனையின்றி பயிர் கடனையும் வழங்கவேண்டும்" என அந்த மனுவில் தொிவித்திருந்தனர். இதே போன்று திருவாரூர் அருகே திருகண்ணமங்கை ஊராட்சியிலும் சம்பா பயிர்கள் கருகி வருவதால் உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்று வருவாய் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இடைத்தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் போராட்டகளமாகவே மாறிவருவது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கிவருகிறது.

சார்ந்த செய்திகள்