Skip to main content

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கம்!

Published on 15/07/2021 | Edited on 15/07/2021

 

Farmers' Association involved in the struggle

 

நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கிட வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்லைக்கொட்டி விவசாயிகள் போராட்டம். நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்கிட வேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது.

 

அதனைக்  கைவிட வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரம் காத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்லைக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏக்கருக்கு 30 ஆயிரம் செலவாகிறது, ஆனால் அரசு உரிய விலை தருவதில்லை. எனவே உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினர்.

 

 

சார்ந்த செய்திகள்