Skip to main content

ரசிகர்களுக்குப் புரியும் - 'ஆடை' குறித்து அமலாபால் விளக்கம்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
Aadai


 

 

அடுத்த சன்னிலியோன் அமலாபால்' என நீலப்பட நடிகையை, மைனாவுக்கு உதாரணம் காட்டுகிற அளவுக்கு...ரத்னகுமார் இயக்கிவரும் "ஆடை' படத்திற்காக அமலாபால் கொடுத்திருக்கும் போஸ் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.
 

ரத்தக்காயமும், வலியுமாக, குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் அமலாபாலின் மேனியில், ஆடைக்குப் பதிலாக... காகித டேப் சுற்றப்பட்டுள்ளது.
 

பார்க்க ரணகளமாக இருந்தாலும், அதை கவர்ச்சியுடன் ஒப்பிட்டு சமூக வலைப்பக்கங்களில் பரவலாக பேசுகிறார்கள்.
 

அமலா இப்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார். அதற்காக ரிஸ்க்கும் எடுக்கிறார்.
 

"அதோ அந்த பறவைபோல' என்கிற அதிரடி ஆக்ஷன் படத்தில் டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்து சமீபத்தில் கையை உடைத்துக்கொண்டார்.
 

இப்போது "ஆடை' படத்திற்காக துணிந்து இப்படி நடிக்கிறார்.
 

அது விமர்சிக்கப்படுவதில் அமலாவுக்கு வருத்தமில்லை.
 

""காரணமில்லாமல் இப்படி நான் நடிக்கவில்லை. படம் பார்க்கும்போது... நான் இப்படி நடித்ததற்கான நியாயம் ரசிகர்களுக்குப் புரியும்'' என விளக்கம் சொல்லியுள்ளார் அமலா.
 

இது பாதிக்கப்பட்ட பெண்ணின் பழிவாங்கல் படம் என்று சொல்கிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்