Skip to main content

108 ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பிரசவம்; சாதுரியமாகச் செயல்பட்ட மருத்துவ உதவியாளர்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

erode sathyamangalam ambulance young women child birth  

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலைப்பகுதி குத்தியாலத்தூர் பஞ்சாயத்து எக்கதூர் கிராமம் கெம்பநாயக்கனுர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது 20). நிறைமாத கர்ப்பிணியான அவர் பிரசவத்திற்காக அத்தியூர் அடுத்த சிற்றூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் செல்வி திடீரென பிரசவ வலியால் துடித்தார். அதை அறிந்த அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் குழுவினர் அத்தியூர் புதூர் பகுதியில் இருந்து வனவிலங்கு நடமாட்டம் உள்ள சிற்றூருக்கு சென்றனர். அங்கு செல்வி வீட்டுக்குச் சென்ற மருத்துவ குழுவினர் அவரைப் பரிசோதித்தனர். பின்னர் பிரசவத்திற்காக செல்வியை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். 108 ஆம்புலன்ஸ் கடம்பூர் வனப்பகுதி சோதனைச் சாவடி அடுத்த கெம்பநாயக்கன் பகுதியின் அருகே வந்தபோது செல்விக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையைப் புரிந்து கொண்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மனோகர் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

 

மருத்துவ நுட்புநர் விஜய், மருத்துவ உபகரண உதவியுடன் செல்விக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது செல்வி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்