Skip to main content

உள்கட்சி பூசலின் உச்சம்.. மோதிக்கொள்ளும் உடன்பிறப்புகள்

Published on 14/04/2019 | Edited on 14/04/2019


அரசியல் கட்சிகள் என்றால் ஒரே கட்சிக்குள் பல கோஷ்டிகள் இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் காலங்களில் அதை தலைவர்கள் சரி செய்வது வழக்கம். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவான திமுக கோஷ்டி பூசல் இந்த தேர்தல் வரை முற்றுப் பெறாமல் மோதல்கள் வரை சென்றுள்ளது. 

 

d

 

வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு வந்த போது கூட திமுக தலைவர் ஸ்டாலின் அனைவரையும் அழைத்து இணைந்து வேலை செய்யனும்.  வேட்பாளர்களை ஜெயிக்க வைக்கனும் இல்லன்னா தேர்தலுக்கு பிறகு நடவடிக்கைகள் இருக்கும் என்று எச்சரித்தார்.
ஆனால், தற்போது தான் உச்சகட்ட மோதல் வரை சென்றுள்ளது. 

 

கோசி மணி குரூப், பழனிமாணிக்கம் குரூப் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவானதால் பாரம்பரியமிக்க தஞ்சை சட்டமன்ற தொகுதியை இழந்தது திமுக.   அடுத்த தேர்தலில் டி. ஆர். பாலு குரூப், பழனிமாணிக்கம்  குரூப் பிரிந்து இரண்டாவது முறையாகவும் தஞ்சை தொகுதியை தாரை வார்த்தார்கள்.

 

 வேட்பாளர்கள் வாங்கிய கடன்களை கூட இன்னும் கட்டி முடித்திருக்க மாட்டார்கள்.  அதற்குள் அடுத்த தேர்தல்.  ஆனால் இப்போதும் அதே குரூப் அரசியலில் திமுக உள்ளது. இதனால் தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் நீலமேகம் கோஷ்டிகளில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறார்.


   இந்த நிலையில் நாடாளுமன்ற வேட்பாளர் பழனிமாணிக்கம் இன்னும் பல கிராமங்களுக்கு போக கூட இல்லை. போகும் இடங்களில் எதிர் கோஷ்டி ஆட்களுக்கு தகவல் சொல்வதில்லை என்றும் சிலரை உதாசீனப்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளையும் உ. பி.கள் எழுப்பி வருகின்றனர்.
   

சில நாட்களுக்கு முன்பு வடுவூர் பகுதியில் மன்னை பகுதி திமுக பிரமுகரை மதிக்கவில்லை வேட்பாளர் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார்கள். அதே போல சில நாட்களுக்கு முன்பு ஒரத்தநாடு ச. ம. உ. புல்லட் ராமச்சந்திரன் ஊரான பின்னையூர் கிராமத்தில் கி. செ. நாகராஜன் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை என்று பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி கேள்வி எழுப்பிய நிலையில் தள்ளுமுள்ளு நடந்து நாகராஜன் மண்டை உடைந்தது.


  இன்று செல்லம்பட்டியில் வேட்பாளர் பழனிமாணிக்கம் வாக்கு சேகரிக்கச் சென்றார்.  அவருடன் ச.ம.உ. புல்லட் ராமச்சந்திரன், மாஜி மகேஷ் கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது என்னை அழிக்க சிலர் திட்டமிட்டுள்ளனர் அது நடக்காது. ஆகவே எல்லாரும் எனக்கு ஓட்டு கேளுங்கள் என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

 

அதாவது குரூப் அரசியலை ஓட்டுக் கேட்கும் இடத்திலும் காட்டுகிறார் வேட்பாளர் என்ற முனுப்பும் இருந்தது.  கூட்டம் முடிந்து வேட்பாளர் சென்ற பிறகு மாஜி மகேஷ் கிருஷ்ணசாமி காரில் ஏறும் போது ஒருவர் காரை தட்டி மாஜியை வம்புக்கு இழுத்ததால் பரபரப்பு தொற்றிக் கொண்டதுடன் சரமாரியான தாக்குதலும் நடந்துள்ளது.


   இது குறித்து கோஷ்டிகளில் சிக்காத உ. பி கள்.. குரூப் அரசியலால் தொகுதிகளை இழந்தோம் என்பதை இன்னும் இவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் பலரை இன்னும் சந்திக்கவில்லை.

 

 திருவோணம் மாஜி சேர்மன் ராஜேந்திரனை கண்டுக்கல.  அதே போல பேராவூரணி பகுதியிலும் பிரச்சாரத்துக்கு போறதை கூட நிர்வாகிகளுக்கு சொல்லவில்லை. அதாவது தஞ்சை தொகுதியில் எதிர் வேட்பாளர்கள் அறிமுகம் இல்லை.  நமக்கு அதிகமான அறிமுகம் இருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்ற மிதப்பான எண்ணம் உள்ளது.  இதை கட்சி தலைமை தலையிட்டு மாற்றவில்லை என்றால் தேர்தலில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்றனர்.

 

சார்ந்த செய்திகள்