கரோனா வைரஸ் தொடர்பாக உலகம் முழுவதும் நடைபெறும் மருத்துவ பணிகள் குறித்தான செய்திகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் பணிகளை செய்துக்கொண்டுயிருப்பது தொலைக்காட்சி செய்தி சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகளின் செய்தியாளர்கள், வீடியோ, புகைப்பட ஒளிப்பதிவாளர்கள் தான்.
மருத்துவர்களை போல் களத்தில் நின்று செய்தியாளர்கள் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதுமட்டும்மல்லாமல் முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டரில் பலர் பதிவிடும் கரோனா புரளிகளை மக்கள் உண்மையென நம்பி பயந்துக்கொண்டு உள்ள நிலையில் செய்தியாளர்கள் முடிந்த அளவுக்கு மருத்துவ துறை சார்ந்த பிரபலங்களிடம் அதுக்குறித்த உண்மை தகவல்களை வாங்கி மக்களிடம் உள்ள அச்சத்தை போக்கி வருகின்றனர்.
இந்நிலையில் பல செய்தியாளர்களும் கரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கையாக இல்லாமல் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. காவல்துறை, தீயணைப்புத்துறை, அரசுத்துறை பணியாளர்கள் கூட ஓரளவு பாதுகாப்பாக உள்ளனர். பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது செய்தித்துறையை சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தான்.
அதனால் அவர்களுக்கு முதன்மையாக முன்னெச்சரிக்கையாக எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து களத்தில் உள்ள செய்தியாளர்களுக்கு விழிப்புணர்வு நிகழச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் மார்ச் 20ந் தேதி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் அலுவவர் பசுபதி, பாதுகாப்பாக இருப்பது எப்படி, கை கழுவுதல் எப்படி என்பதை செயல்முறை ஒளிப்பட காட்சிகளை திரையில் காட்டி அதன்படி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை விளக்கி கூறினார்.
மேலும் வீடுகளில் பேனப்பட வேண்டிய சுகாதார முறைகள் கொரானா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள் அனைவருக்கும் எடுத்துரைக்கப்பட்டது. இதில் ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி தாலுக்காக்களை சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், அந்த பள்ளியின் ஆசிரியர்கள் என 100 பேர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்திய அந்த தனியார் பள்ளியின் செந்தில்குமார்க்கு செய்தியாளர்கள் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.