Skip to main content

களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறீர்களா ரஜினி? சீமான் ஆவேசம்!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
Bharathi raja

ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்புகளும் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் பாரதிராஜா,

போராட்டத்தை ஒளிபரப்பிய அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி. நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு சென்னை விமான நிலையத்தில் கருப்புக்கொடி காட்டப்படும். அடுத்த ஐ.பி.எல்.போட்டியின் போது போராட்டம் வேறுவிதமாக இருக்கும். கிரிக்கெட் ரசிகர்களை யாரும் தாக்கவில்லை.

"தமிழக வாகனங்கள் கர்நாடகத்தில் தாக்கப்பட்டபோது ரஜினி ஏன் குரல் எழுப்பவில்லை?. காவிரி விவகாரத்தில் தமிழக வாகனங்கள் கர்நாடகாவில் தாக்கப்பட்ட போதும், எரிக்கப்பட்டபோதும் வன்முறையாகத் தெரியவில்லையா? அப்போதெல்லாம் ரஜினி என் குரல் கொடுக்கவில்லை?. பூ என்று நினைத்தேன் - பூ நாகம் என்று இப்போதுதான் தெரிகிறது என அவர் கூறினார்.

இயக்குனர் அமீர் பேசியதாவது,

ரஜினிகாந்தின் டிவிட்டர் அதிகாரவர்க்கத்துக்கு ஆதரவாகவே பேசுகிறது. ரஜினி டிவிட்டர் பாமர மக்கள் பாதிக்கப்படும்போது பேசவில்லை. திருச்சி உஷா தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ரஜினி பதிலளிக்காமல் சென்றார். அலங்காநல்லூர் போராட்டம் குறித்து ஏன் ரஜினி பேசவில்லை? ரஜினிகாந்த் பேசவில்லை, பேசவைக்கப்படுகிறார் என கடுமையாக சாடினார்.
 

Bharathi raja


சீமான் பேசியாதவது,

அலங்காநல்லூர் எங்கே இருக்கிறது என்றாவது ரஜினிக்குத் தெரியுமா? போலீசார் தாக்கப்பட்டதை கண்டிக்கும் ரஜினிகாந்த், போலீசாரின் வன்முறையை கண்டிக்காதது ஏன்? நான் போலீசாரை தாக்கவில்லை - விலக்கித்தான் விட்டேன். போராட்டத்துக்குச் செல்லும் போதே முதலில் போலீசார் தாக்கினர். ஆந்திராவில் தமிழர்கள் மீது போலீசார் தாக்குதல் தாக்கிய போது ஏன் ரஜினி குரல்கொடுக்கவில்லை. மெரீனாவில் போலீசார் சீருடையுடன் வீடுகளை கொளுத்தவில்லையா?. காவிரி மேலாண்மை வாரியம் கோரும் அட்டையை ரஜினி ரசிகர்கள் அணியவில்லை. களத்தில் இறங்கிப் போராடியிருக்கிறீர்களா ரஜினி? வேர்வையுடன் முழக்கம் எழுப்பி போராடியிருக்கிறீர்களா ரஜினி? என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். நாளை பிரதமர் வரும் போது நிச்சயம் கருப்பு கொடி காட்டப்படும் என்பது அனைவரின் பேச்சிலும் வெளிப்பட்டது.

சார்ந்த செய்திகள்