Skip to main content

பத்து மணிக்குள் உணவு விடுதிகளை மூட உத்தரவிட கூடாது - காவல்துறைக்கு எதிராக வழக்கு

Published on 20/03/2018 | Edited on 20/03/2018
hotel

 

தமிழகத்தில் உள்ள உணவு விடுதிகளை 10 மணிக்குள் மூட வேண்டும் என்ற காவல்துறையின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் காவல்துறை விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 


சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு தாக்கல் செய்த பொது நல வழக்கில்  "மேற்கு மாம்பலத்தில் தாம் பத்து மணிக்கு ஹோட்டலுக்கு சென்ற போது உணவு வழங்க முடியாது, காவல்துறையினர் இரவு பத்து மணிக்குள்ளாக கடையை மூட வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாகவும் அப்படி மூடவில்லை என்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருப்பதால் தமக்கு உணவு வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டனர் என்று மனுவில் தெரிவித்துள்ளார். 

 


இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு மனு அளித்தேன். இதற்கும் காவல்துறைக்கும் சம்மந்தம் இல்லை என விளக்கம் அளித்தனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்த அரசாணையில் 365 நாட்களும் கடையை திறந்து வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரசானையை மீறி காவல்துறை இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் கேரள நீதிமன்றமும் கடந்த 2016ஆம் ஆண்டு இரவு 11க்கு  மேல் கடைகளை மூடலாம் என்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

 


இந்நிலையில் தமிழகத்தில் இரவு பத்து மணிக்குள்ளாக கடைகளை மூடுவது என்பது கடைகள் மற்றும் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் , இதை போலவே மஹாராஷ்டிராவிலும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைத்திருக்கலாம் என கடந்த ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. எனவே இரவு பத்து மணிக்குள்ளாக அனைத்து உணவு விடுதிகளையும் மூட சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். பத்து மணிக்குள் உணவு விடுதிகளை மூட உத்தரவிட கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

 


இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆனந்தாஸ் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை! 

Published on 28/05/2022 | Edited on 28/05/2022

 

Income tax check on Anandas restaurants!

 

ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான உணவகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

 

கோவையை மையமாக கொண்டு உணவகங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் கடைகளை இயக்கி வரும் ஆனந்தாஸ் குழுமம், தமிழகம் முழுவதும் சுமார் 40- க்கும் மேற்பட்டஉணவகங்களை அமைத்துள்ளது. கோவையில் மட்டும் வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், லட்சுமி மில்ஸ், ராம்நகர், காந்திபுரம், சுந்தரபுரம், அவிநாசி சாலை உள்ளிட்ட இடங்களில் 9 உணவகங்களை நடத்தி வருகிறது. 

 

இந்த நிலையில், ஆனந்தாஸ் குழுமத்திற்கு சொந்தமான அனைத்து உணவகங்களில் இன்று (28/05/2022) காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை 40- க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருவதாக தகவல் கூறுகின்றன. 

 

ஆனந்தாஸ் குழும உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

 

Next Story

உணவகத்தில் அரசு பேருந்துகளை நிறுத்த நிபந்தனைகள் வெளியீடு!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

Release of conditions for parking government buses at restaurants!

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்படும் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய ஒரு வருடத்திற்கு உரிமம் வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் (இரண்டு உறை முறையில்) அதற்கான படிவத்தில் கோரப்படுகின்றன. ஒப்பந்தப்படிவம் 19/03/2022 முதல் 27/04/2022 வரை பெற்றுக் கொள்ளலாம். 

 

பூர்த்திச் செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி படிவம் 28/04/2022 அன்று மாலை 03.00 மணி வரை பெறப்பட்டு பின்னர் ஒப்பந்ததாரர் முன்னிலையில் 03.30 மணியளவில் திறக்கப்படும். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் ஒப்பந்தப்புள்ளி படிவத்திற்கு ரூபாய் 1,000- க்கான தொகையைக் கேட்பு வரைவோலையாக M.D. S.E.T.C. என்ற பெயரில் எடுத்து ஒப்பந்தப்புள்ளி படிவத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். கேட்பு வரைவோலை இணைக்கப்படாத ஒப்பந்தப்புள்ளி படிவம் நிராகரிக்கப்படும். 

 

ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள்: 

உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும் தான் தயார் செய்ய வேண்டும். உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி, பராமரிக்க வேண்டும். 

 

பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும். கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டும். மேலும், பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்பொழுதும் இருக்க வேண்டும். கழிவறையை கம்பரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், பயோ கழிவறை இருக்க வேண்டும். 

 

உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட் தளமாக (அல்லது) Pavar Block போட்டிருக்க வேண்டும். இவ்வாறு தமிழநாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.