Skip to main content

இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

DMK MLAs meeting today!

 

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தாக்கலாகும் இ-பட்ஜெட்டை கணினி திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடக்க இருக்கிறது. சென்னையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் ஸ்டாலின்  தலைமையில் நடைபெற இருக்கிறது. நடக்கவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்