Skip to main content

தி.மு.க வேறு வழியின்றி நிலைப்பாட்டை மாற்றியுள்ளது -அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி!

Published on 24/08/2020 | Edited on 24/08/2020

 

DMK has changed its position without any other option -Minister Kadampur Raju

 

இன்று தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்தின் வளர்ச்சியை தி.மு.க தடுப்பதாகச் சாடியிருந்தார். இதற்குப் பதிலளித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழ்ப் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் ஒரே எதிரி பா.ஜ.கதான் என பதில் விமர்சனம் வைத்திருந்தார்.

பா.ஜ.க -தி.மு.க இடையே விமர்சன போட்டி நிகழ்ந்துள்ள நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "தேர்தல் காரணமாக இந்துக்களை சமாதானப்படுத்த தி.மு.க முயற்சி செய்கிறது. அதேபோல, கந்தசஷ்டி விவகாரத்தில் எதிர்ப்பு எழுந்ததால் வேறு வழியின்றி நிலைப்பாட்டை தி.மு.க மாற்றியுள்ளது" என்றார்.

மேலும் "கட்சிக்கு  விசுவாசமாக இருக்க வேண்டும் என துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கூறியது சரியானது. தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்