Skip to main content

மலைவாழ் மக்களுடன் தீபாவளி கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

Published on 04/11/2021 | Edited on 04/11/2021

 

 District Superintendent of Police celebrates Diwali with hill people

 

தீபாவளியை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் பொதுமக்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகம் உள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தலைமையிலான காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று தீபாவளி மாலை நான்கு மணியளவில்  ஏலகிரி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரில்  சென்று அங்குள்ள முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பட்டாசு மற்றும் இனிப்புகளைத் தந்து திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

 

 District Superintendent of Police celebrates Diwali with hill people

 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் திடீர் வருகையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அங்குள்ளவர்களுக்கு கரோனா விழிப்புணர்வு மற்றும் தீபாவளியினை பாதுகாப்பாகக் கொண்டாடும்படி அறிவுறுத்தினார். அதன்பின் ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடினார்.

 

 

சார்ந்த செய்திகள்