Skip to main content

ஆளும்கட்சி மா.செவை புறக்கணித்தது ஏன் ? –பாமக வேட்பாளர் மீது அதிருப்தி

Published on 22/03/2019 | Edited on 22/03/2019

அரக்கோணம் நாடாளமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நிற்கிறது. இதன் வேட்பாளராக முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி நிற்கிறார். அவர் மார்ச் 22ந்தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

 

 

வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பாமக வேட்பாளரோடு, அதிமுக நிர்வாகி அப்பு மற்றும் தேமுதிக மா.செ மட்டும் சென்றுயிருந்தனர். அவர்கள் முன் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வந்தார் மூர்த்தி. இதுதான் தற்போது சாதி ரீதியிலான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 Dissatisfaction on arakonam pmk candidate

 

அதிமுக கிழக்கு மா.செவாக இருப்பவர் அரக்கோணம் தனி தொகுதி எம்.எல்.ஏ வழக்கறிஞர் ரவி. அரக்கோணம் தொகுதிக்கான கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைப்பது, பூத் ஏஜென்ட் நியமனம் என முழு தேர்தல் வேலை பார்ப்பது அவர் தான். ஆனால் அவர் வேட்புமனு தாக்கலின் போதுயில்லை.

 

இதற்கு காரணம் பாமகவின் சாதி அரசியல் தான். பட்டியலின சாதியான தலித் சமுதாயத்தை சேர்ந்த ரவியை தன்னுடன் அழைத்து சென்றால் தன் சாதியை சேர்ந்தவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதற்காக ரவியை புறக்கணித்துள்ளார்கள் என்கிற குரல்கள் அதிமுகவில் கேட்கின்றன. இதனை தற்போது தலித் அமைப்புகளும் உற்று நோக்குகின்றன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்