Skip to main content

ஓபிஎஸ்,இபிஎஸ் வேட்புமனுவில் கையெழுத்திடதடைகோரிய வழக்கு தள்ளுபடி

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

ஓபிஎஸ்,இபிஎஸ்க்கு எதிராக அதிமுகவில் இருந்து முன்னாள் எம்பியாக தேர்தெடுக்கப்பட்ட கேசி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

 

nn

 

வேட்புமனுவில்  அதிமுகவின் இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் உள்ள  ஓபிஎஸ், இபிஎஸ் பார்ம் ஏ பார்ம் பி ஆகிய முக்கிய படிவங்களில் கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் இந்த செயல் அதிமுக விதிகளுக்கு புறம்பானது என  தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்த நிலையில், தற்போது அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி யோகேஷ் கண்ணா அத்தகைய தடையை பிறப்பிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை எனவே இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்