Skip to main content

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 30,744 பேருக்கு கரோனா தொற்று உறுதி

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

hjk

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 30,744 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை 28,569 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,55,648 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 6,452 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 6,981 என்று இருந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

 

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 21 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 122 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1,94,697 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 23,372 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 28,71,143 பேர் மொத்தமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்