Skip to main content

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

Published on 03/04/2022 | Edited on 03/04/2022

 

sfg

 

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

 

கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால் கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு படிப்படியாக நீக்கி வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழக சுகாதாரத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

 

அதன்படி திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருந்த போதும் முக கவசம், தனிநபர் இடைவெளி, தேவையற்ற கூட்டம் சேர்த்தலை தடுத்தல் முதலியவற்றை தொடர்ந்து கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 92 சதவீதமும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 75 சதவீத பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்