Skip to main content

பழனி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு கரோனா தொற்று உறுதி!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

பரப

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய்க் காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.

 

தமிழகத்தைப் பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகின்றது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் முதலில் தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன் மரணமடைந்தார். அடுத்து தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, தங்கமணி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மஸ்தான், கணேசன், கீதா ஜீவன், காந்தி, செங்குட்டுவன் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். சிலர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மற்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் பழனி தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் ஐ.பெரியசாமியின் மகனுமான செந்தில் குமார் எம்.எல்.ஏ.வுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்