Skip to main content

முழு ஊரடங்கு; வெறிச்சோடிய கோயம்பேடு, பசியால் வாடும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள்..! (படங்கள்)

Published on 24/05/2021 | Edited on 24/05/2021

 

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தீவிர பரவல் காரணமாக அனைத்து இடங்களிலும் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மே 10 ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 24ஆம் தேதியிலிருந்து ஒரு வார காலத்திற்குத் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ளதால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனர். நடுத்தர மக்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள், ஆதரவற்ற மக்கள் மற்றும் சாலையோர மக்கள் தங்களது தினசரி வாழ்க்கையைச் சுமுகமாக நடத்த முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

அவ்வாறு இருப்பவர்களுக்குத் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் உணவளித்து வருகின்றனர். மேலும், பலர் சாலையோர வசிக்கும் மக்களுக்கு தங்களால் முடிந்தவற்றைக் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். சிலர் உணவு, தண்ணீர் பாட்டில், முக கவசம் ஆகியவற்றைத் தேவை உள்ளவர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று கொடுத்து உதவுகின்றனர். முழு ஊரடங்கு காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம் தடைசெய்யப்பட்டதால் மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் சிலர் வேலையின்றியும் உண்ண உணவின்றியும் சாலைகளில் அமர்ந்திருந்தது காண்போரை வருந்தச்செய்வதாக இருந்தது. 

 

 


 

சார்ந்த செய்திகள்