Skip to main content

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கரோனா பலி எண்ணிக்கை... இன்றைய நிலவரம்...

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

corona cases count in tamilnadu

 

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 119 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

 

தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நீண்ட நாட்களுக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது. சென்னையில் இன்று 984 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு 1,07,109 ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னை தவிர்த்துப் பிற மாவட்டங்களில் இன்று 4,896 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல இன்று மட்டும் தமிழகத்தில் 119 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 4,690 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று கரோனா பாதிப்பால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்