Skip to main content

கமல் கட்சி பொதுக்கூட்டத்திற்கு பந்தல் அமைக்கும் பணி!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
kamal madurai

 

மதுரையில் வரும் 21ந் தேதி மாலை ஒத்தக்கடை ரிங் ரோடு வேளாண்மை கல்லூரி எதிரே உள்ள காலி இடத்தில் கட்சியின் பெயர், கொடி அறிமுகப்படுத்தி பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை வந்து கலந்து கொள்கிறார் கமல்ஹாசன்.   இந்த இடத்தின் வாடகை ரூ 2.50 லட்சமும் மைக், லைட், ஸ்டேஜ், பேரிக் காட் ஆகியவைகளுக்கு ரூ 17 லட்சம். இந்த குத்தகையை காரைக்குடி STR, ரவி குரூப்பும், பிக்கிவின்ஸ் ஏஜென்ஸி முகேஷ் குருப்பும் சேர்ந்து எடுத்துள்ளனர். இவர்களை கமலே நேரடியாக தேர்ந்த்தெடுத்துள்ளாராம்.

 

 திருச்சியில் இருந்து உட்காரும் சேர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது .  நகர போலீஸ் அலுவலகத்தில் அனுமதி எழுதி கொடுத்துள்ளார்களாம். இதுவரை எந்த பதிலும் இல்லை என்கின்றனர். இவை அனைத்தையும் கோவை தங்கவேலும், கபிலனும் தான் பார்த்துக் கொள்கிறார்களாம். இதில் மதுரை மாவட்ட மன்றத்தினர் நிர்வாகிகள் தலையீடு எதுவும் இல்லையாம். பொதுக் கூட்டம் நடக்கும் இடத்தில் நிர்வாகிகள் யாரும் இல்லை. பொதுக் கூட்டம் அன்று தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் பேர் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.

 

- ஷாகுல்

சார்ந்த செய்திகள்

Next Story

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ - திமுக பொதுக்கூட்டங்கள் அறிவிப்பு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Stalin's voice to restore rights DMK public meetings notice

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். மேலும் இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலுள்ள நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் நாடாளுமன்றத் தொகுதி வாரியான பொதுக்கூட்டங்களில் பொறுப்பு அமைச்சர்களுடன், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் இணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

நெருங்கும் தேர்தல்; நெருக்கும் சச்சின் பைலட்; கலக்கத்தில் காங்கிரஸ்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

coming election sachin pilot gives pressure for congress due to separate party start

 

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றதில் இருந்தே அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே உட்கட்சி மற்றும் ஆட்சி தொடர்பாக மோதல் தொடர்ந்து வருகிறது.

 

அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக கடந்த 2020 ஆண்டு ஜூலை மாதம் அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் 18 பேர் போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மேலிடத்தின் தலையீட்டையடுத்து துணை முதல்வர் மற்றும் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் இணைந்து செயல்பட காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியது. இதையடுத்து ஒன்றாக இணைந்து செயல்பட்டு வந்தனர். இருப்பினும், வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சச்சின் பைலட் வலியுறுத்தி வருகிறார். இதனால் சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.

 

மேலும், வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆளும் காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதப்  போராட்டத்தை ஜெய்ப்பூர் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நடத்தினார். அதனைத் தொடர்ந்து ஜன் சங்கர்ஷ் யாத்ரா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஊழல் மற்றும் தேர்வுத்தாள் முன்கூட்டியே கசிந்த விவகாரம் ஆகியவற்றுக்கு எதிராக அஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூருக்கு கடந்த மே மாதம் 11 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை 5 நாள் நடைப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து சச்சின் பைலட் தனிக் கட்சி தொடங்க உள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.

 

coming election sachin pilot gives pressure for congress due to separate party start

இந்நிலையில் சச்சின் பைலட்டின் தந்தையும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட்டின் நினைவு தினம் வரும் ஜூன் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ராஜஸ்தான் மாநிலம் தவுசாவில் ராஜேஷ் பைலட்டின் நினைவு தினத்தை முன்னிட்டு சச்சின் பைலட் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் தனிக் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை சச்சின் பைலட் வெளியிடுவார் என்று தகவல்கள் வருகின்றன.