Skip to main content

திருநங்கை கொலை வழக்கில் வாலிபர் கைது...!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

Coimbatore Trans Kitchen transgender incident

 

கோவை ‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா கொலை வழக்கில், 23 வயதுடைய நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

‘ட்ரான்ஸ் கிச்சன்’ உணவக உரிமையாளர் திருநங்கை சங்கீதா, கோவையில் வடகோவை, ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளில் திருநங்கைகளுக்காக 'ட்ரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில் பிரத்தியேக உணவகத்தை தொடங்கி நடத்தி வந்தார். 


கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநங்கை சங்கீதா அவரது இல்லத்தில் உடல் அழுகிய நிலையில் பல வெட்டுக் காயங்களுடன் தண்ணீர் பிடித்துவைக்கும் பிளாஸ்டிக் டிரம்மில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அவரை கொலை செய்தது யார்? எதற்காக? என பல மர்மங்கள் இருந்தது. இது தொடர்பாக சாய்பாபா காலனி காவல் துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திவந்தனர். அதில் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (23) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிடிப்பட்ட அந்த நபரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்