Skip to main content

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது...

Published on 28/04/2020 | Edited on 28/04/2020
Coimbatore



கோவை பேரூர் அருகே சட்ட விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பேரூர் சரக டி.எஸ்.பி வேல்முருகன் உத்தரவின் பேரில் பேரூர் ஆய்வாளர் சுகவனம் தலைமையில் சென்ற பேரூர் போலீஸார் பேரூர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். 
 

அப்போது தீத்தி பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார், செந்தில்குமார், நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் ஒரு வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. உடனடியாக மது விலக்கு தடுப்பு பிரிவு போலீஸுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. 

பின் சட்டவிரோதமாகச் சாராயம் விற்பனை செய்த மூவரையும் கைது செய்த போலீஸார் அங்கிருந்து 30 லிட்டர் கள்ளச்சாராயத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் அதைக் கீழே ஊற்றி அழித்தனர்.

 

சார்ந்த செய்திகள்