Skip to main content

கோவை ஆயுள்சிறை கைதி மரணத்திற்கு  சிறைத்துறையே காரணம்; நாகை முன்னாள் எம்,எல்,ஏ 

Published on 11/03/2018 | Edited on 11/03/2018
kovai

 

கோவை சிறையில் ஆயுள் சிறைவாசி ரிஜ்வான் பாஷா  மரணம் சிறைத்துறையின் மெத்தனம் என்கிறார் முன்னாள் நாகை எம்.எல்.ஏ எம்ஜிகே நிஜாமுதீன்.  அவர் மேலும்", இன்று காலை கோவை மத்திய சிறையில் ரிஜ்வான் பாஷா என்ற ஆயுள் சிறைவாசி மரணம் அடைந்திருக்கிறார். இவருக்கு வயது சுமார் 40. சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது.  ரிஜ்வான் பாஷா 21 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

 

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது அறிவித்த பொது மன்னிப்பில் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். 2008ம் சுமார் 2000 பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட போது தகுதி இருந்தும் முஸ்லிம் என்ற காரணத்தால் மறுக்கப்பட்டது.

 

இவர் இறந்த பின்பே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவருகிறது. இது சிறையில் போதிய மருத்துவம் கவனிப்பு இல்லாததே இவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். ஆகவே இவரது மரணத்திற்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். இம் மரணம் குறித்து சிறப்பு விசாரணைக்கு அரசு உத்தரவிடவேண்டும் 


        கோவை சிறையில் ஆயுள் தண்டனை  சிறைவாசிகளில் சிறையிலேயே மரணிக்கும் நான்காவது முஸ்லிம்  சிறைவாசி ரிஜ்வான் பாஷா.  இதற்கு முன் தஸ்தகீர், சபூர்ரஹ்மான் மற்றும் ஒசீர் ஆகியோர் மரணத்துள்ளார்கள். 


   அடுத்த சிறைவாசி மரணிக்கும முன் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் அரசியலமைப்புச் சட்டம் 161ம் பிரிவை  பயன்படுத்தி தமிழக அரசு 19 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அனைவரையும் உடனே விடுதலைச் செய்ய வேண்டும்.  


   அகால மரணமடைந்த ரிஜ்வான் பாஷா குடும்பத்தினருக்கு ரூ25 லட்சம் இழப்பீடும் வழங்கவேண்டும்" என்றார்.

சார்ந்த செய்திகள்