Skip to main content

மூடப்பட்ட ரயில்வே கேட்! திறக்க முடியாததால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Closed Railway Gate! Traffic jam due to not being able to open!

 

சென்னை திருச்சி ரயில்வே மார்க்கத்தில் உளுந்தூர்பேட்டை - விருத்தாசலம் இடையில் உள்ளது கோ.பூவனூர். இந்த ஊரில் பேசஞ்சர் ரயில் மட்டும் நின்று செல்லும். இந்த ஊருக்கு அருகே ரயில்வே கேட் ஒன்று உள்ளது. மாத்தூர், வீரட்டிக்குப்பம், பவழங்குடி, பழைய பட்டினம், சித்தேரி குப்பம் உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராம மக்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இதன் வழியாக பேருந்து போக்குவரத்தும் உண்டு. 

 

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் உளுந்தூர்பேட்டை கடந்து விருத்தாசலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் வருவதை ஒட்டி கேட் கீப்பர் பூவனூர் ரயில்வேகேட்டை மூடினார். கேட்டை கடந்து ரயில் சென்ற பிறகு, கேட் கீப்பர் போக்குவரத்திற்குக் கேட்டை திறக்க முயன்றார். ஆனால் கேட்டை திறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் கேட்டை திறக்க முடியவில்லை. 


இதையடுத்து ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கேட்டை திறந்தனர். இந்த கேட்டை கடந்து செல்வதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்தன. இதனால் பொதுப் போக்குவரத்து அப்பகுதியில் சில மணி நேரம் முடங்கிப் போனது.

 

சார்ந்த செய்திகள்