Skip to main content

முதல்வர் பழனிசாமி இன்று மாலை டெல்லி பயணம்

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
cm

 

நிதி ஆயோக் அமைப்பின் 4-வது கூட்டம்  நாளை  நடைபெறுகிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்ளும் கலந்துகொள்கிறார்கள்.

 

இந்நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.

 

நிதி ஆயோக் கூட்டம் நாளை காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.  கூட்டம் முடிந்ததும், பொதிகை தமிழ்நாடு இல்லத்துக்கு திரும்பும்  பழனிசாமி, நாளை இரவு தமிழகம் திரும்புகிறார். 

சார்ந்த செய்திகள்

Next Story

மகாத்மா காந்தி பிறந்தநாள்- தமிழக ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மரியாதை! (படங்கள்)

Published on 02/10/2020 | Edited on 02/10/2020


மகாத்மா காந்தியின் 152- வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைத்துள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.

 

அதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் காமராஜ், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

 

அதன் தொடர்ச்சியாக, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டனர்.