Skip to main content

டூவீலர் பேரணி நடத்தி பாஜக சாதனையை விளக்கிய தமிழிசை

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக அனைத்து மாநிலங்களிலம் கூட்டணி வைத்து வருகிறது. மேலும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மத்திய பாஜக அரசின் ஐந்து ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை கூறி வருகிறது. 

 

tamilisai soundararajan



இந்த நிலையில் இன்று பாஜக அரசின் ஐந்து ஆண்டு கால சாதனைகளை விளக்கி இருசக்கர வாகன பேரணி நடந்தது. அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா மத்தியப்பிரதேசத்தில் நடந்த இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டார். சென்னையில் நடந்த பேரணியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கலந்து கொண்டார். 


 

சார்ந்த செய்திகள்