Skip to main content

சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு உதவி ரோபோ!

Published on 03/04/2020 | Edited on 03/04/2020


சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். 

அதைத் தொடர்ந்து  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உதவ ரோபோ சேவையை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 
 

chennai stanley government hospital robots facilities


பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "நோயாளி தனிமைப்படுத்தப்பட்டோருக்கு மருந்து, உணவு வழங்கும் பணியில் ரோபோ ஈடுபடுத்தப்படும்.ரோபோக்கள் செவிலியர்களால் இயக்கப்பட்டு மருந்து மற்றும் உணவை வழங்கும்.மூன்று ரோபோக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.இந்த மருத்துவ மனையில் கரோனா சிறப்பு வார்டு அமைக்கப் படுகிறது. 500 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு ஏற்படுத்தப்படும்" என்றார். 

 

சார்ந்த செய்திகள்