Skip to main content

செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கு: 2 பேர் என்கவுண்ட்டர்!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Chengalpattu incident ... Four arrested including woman!

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

 

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுத்தெருவில் வசித்து வரும் மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

 

வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

 

இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திரமேரூர் திருப்புலிவனம் பகுதியில் பதுங்கி இருந்த மாதவன், மொய்தீன், தினேஷ், ஜெசிகா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில் அதில் தினேஷ், மொய்தீன் என்கவுண்ட்டர்  செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்