Skip to main content

மத்திய அரசின் "BCPL" நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி !

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "Brahmaputra Cracker and Polymer Limited" நிறுவனத்தில் "Graduate Apprentices , Technical Apprentices" உள்ளிட்ட  66 அப்ரண்டீஸ் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை BCPL நிறுவனம் வெளியிட்டது. இந்த பணியானது மத்திய மனித வள மேம்பாடு துறை அமைச்சகத்தின் கீழ் ஒரு வருட அப்ரண்டீஸ் பணி அனைத்து அரசு நிறுவனங்களிலும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் இந்த பணியில் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் (2016, 2017 ,2018) சுமார் 55% விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் (Category - 1 " Graduate Apprentices " ) ஒரு வருட பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 

job bcpl



இந்த பணியில் சேருவோருக்கு உதவித்தொகையாக மாதம் (Stipend for Month) ரூபாய் 7,500 வழங்கப்படும் என நிறுவனம் தனது அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. மேலும் டிப்ளோமா முடித்த (Diploma Passed year 2016 ,2017, 2018) இளைஞர்கள் சுமார் 55% விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் ( Category - 2 "Technical Apprentices" ) பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணியில் சேருவோருக்கு உதவித்தொகையாக மாதம் ரூபாய் 5,000 வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

bcpl



இதனை தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 08/03/2019 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 30/04/2019. இதற்கான இணைய தள முகவரி : www.bcplonline.co.in. மேலும் இந்த பணியிடங்களுக்கு  விண்ணப்பிப்பதற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.  இந்த பணியிடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு மின்னஞ்சல் முகவரி : bcplapprentices@bcplindia.co.in தொடர்பு கொள்ளலாம். மேலும் இது தொடர்பான முழு விவரங்களுக்கு இணையதள முகவரி : https://bcplonline.co.in/ அணுகலாம்.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்