Skip to main content

ஓபிஎஸ் மீதான வழக்கு; உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Case against OPS The High Court itself initiated the inquiry

 

ஓ.பன்னீர்செல்வம் மீதான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாராணை நடத்த உள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கடந்த 2001 - 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக கடந்த 2012 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள்,  மகள் சகோதரிகள் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றத்தால் ஒ.பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை மீண்டும் தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்