Skip to main content

பெட்ரோல் போட பணமில்லை... குதிரை வண்டியில் பயணம்!

Published on 03/07/2021 | Edited on 03/07/2021

 

Can't put petrol Travel in a horse cart!

இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் நாட்டு மக்கள் பேரவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை தினசரி உயர்ந்து,  தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 101- க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இருவர் பயணிக்க வேண்டிய மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தை உணராமல் மூன்று முதல் நான்கு பேர்கள் வரை பயணிக்கிறார்கள்.

 

இந்த நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதயைச் சேர்ந்த 5 பேர் கீரமங்கலம் வழியாக அறந்தாங்கிக்கு தங்களின் குதிரை வண்டியில் சென்று திரும்பும் போது அவர்கள் நம்மிடம் கூறுகையில், "பந்தயக் குதிரை வளர்க்கிறோம். ஒரு வருடமாக கரோனா ஊரடங்கால் எந்த ஊரிலும் பந்தயம் இல்லை. பந்தயம் இல்லை என்பதால் குதிரைக்கு புல், கொடுக்காமல் இருக்க முடியுமா தினமும் 200 ரூபாய் செலவாகுது. தினசரி பயிற்சி கொடுக்கனும். இந்த நிலையில தான் அறந்தாங்கி போகவேண்டிய வேலை இருந்தது. ஐந்து பேர் இரண்டு இரு சக்கர வாகனத்தில் போகனும் பெட்ரோல் போட பணமில்லை. அதனால் ஒரே குதிரை வண்டியில போய் திரும்புறோம்" என்றனர். 

 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க முடியவில்லை என்பதை சாதாரணமாக சொல்லிவிட்டு சென்றனர்.

 

இன்னும் பெட்ரோல், டீசல் விலை உயரும் போது, கடந்த காலங்களில் போக்குவரத்து நாம் பயன்படுத்திய சைக்கிள் பயணங்களும், மாட்டு வண்டி பயணங்களும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்