Skip to main content

தீ குளித்த காதலி; காப்பாற்ற முயன்ற காதலனுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
Boyfriend passed away trying to save girlfriend who tried to lost life

மயிலாடுதுறை சேர்ந்த  ஆகாஷ் பூம்புகார் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு  படித்து வந்தார். இவருக்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திலகவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திலகவதி மயிலாடுதுறையில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஆகாஷுக்கும் திலகவதிக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில் ஆகாஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் திலகவதியிடம் ஆகாஷ் பேச்சுவார்த்தையை குறைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து திலகவதிக்கு தெரியவர, ஆகாஷிடம் கேட்டிருக்கிறார். இது குறித்து சம்பவத்தன்று இருவரும் பூம்புகாரில் திலகவதியும், ஆகாஷும் சந்தித்து பேசியுள்ளனர். அங்கு இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி வந்துள்ளனர். அப்போது திடீரென திலகவதி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திலகவதி தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆகாஷ், திலகவதியை காப்பாற்ற முயல, ஆனால் அதற்குள் இருவர் மீதும்   தீ பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து உடல் முழுவதும் தீ காயங்களுடன் உயிருக்கு போராடியவர்களை அங்கிருந்து மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், திலகவதி தஞ்சாவூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த ஆகாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து தஞ்சாவூரில் திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இறப்பதற்கு முன் ஆகாஷ் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் திலகவதியின் மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்