Skip to main content

தமிழகத்தை கலவர பூமியாக்கி ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் திட்டம்: கி.வீரமணி

Published on 20/03/2018 | Edited on 20/03/2018


தமிழகத்தை கலவர பூமியாக்கி ஆட்சியை பிடிப்பதே பாஜகவின் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதியை மர்மநபர்கள் யாரோ சேதப்படுத்தியுள்ளனர். சிலையின் தலைப்பகுதி முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகையில்,

பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் உள்ளார்ந்த நோக்கம், இந்த பூமியை காலவரமாக்க வேண்டும். மக்களை சீண்டி அதன் மூலம் வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இதை செய்கிறது. ஆனால் இதை இந்த அரசு தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சிலைகளுக்கெல்லாம் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்று கூறிய அரசின் பாதுக்காப்பு இது தானா? இது மக்களை சீண்டி பார்க்கும் நிகழ்வு இதற்கு கண்டிப்பாக மக்கள் பதில் சொல்வார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெரியார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்கள்! (படங்கள்)

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

 

திராவிடர் கழக முன்னாள் தலைவர் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று (24ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் கட்சித் தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

 

 

 

Next Story

இந்து முன்னணி ராமகோபாலன் மறைவு... கி.வீரமணி, மு.க.ஸ்டாலின், தமிழிசை இரங்கல்!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Ramagopalan's demise ... MK Stalin and K. Veeramani mourn

 

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் (வயது 94) நேற்று உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயரிழந்துள்ளார். 

 

dmk


ராமகோபாலனின் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, "கொள்கையில் நேர் எதிர்நிலையில் இருந்தாலும் மனிதநேயம் அடிப்படையில் சந்திக்கும்போது பண்பு  பரிமாறிகொள்வோம்" என  இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதேபோல் தி.மு.க தலைவர் ஸ்டாலின், "எதிரெதிர் சித்தாந்தங்களில் இருந்தாலும், கலைஞரும் ராமகோபாலனும் சிறந்த நல்ல நண்பர்களே. ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனையுடன் சமயக் கருத்துகளை சமுதாயத்திற்கு எடுத்துரைத்த துறவியின் மறைவு பேரிழப்பு" என இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதேபோல், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. கொள்கையில் உறுதியாக இருந்து வாழ்க்கையில் உறுதியாக தடம் பதித்த, வீரத்துறவி ராமகோபாலன்" எனவும் தெரிவித்துள்ளார்.