Skip to main content

பெட்ரோல் குண்டு வீசிய நபர் சிறையில் அடைப்பு...பா.ஜ.க. அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பு!

Published on 11/02/2022 | Edited on 11/02/2022

 

bjp office incident police investigation court order

 

சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை சிறையில் அடைத்த காவல்துறையினர், பா.ஜ.க. அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பை அளித்துள்ளனர்.

 

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான கருக்கா வினோத் என்பவர் மீது வெடி பொருட்களால் சொத்தை சேதப்படுத்துதல் மற்றும் வெடி பொருள் சட்டம் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். 

 

பெட்ரோல் குண்டு வீசியதை அடுத்து, பா.ஜ.க. அலுவலகம் அமைந்துள்ள தெருவில் இருபுறமும் கூடுதலாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அந்த அலுவலகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ரோந்து வாகனங்கள் மூலம் காவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்