Skip to main content

மீட்கப்பட்ட ஏழு சாமி சிலைகள்... பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

 BJP executive who tried to sell idols ... 7 idols recovered ... Four arrested!


                                                   கோப்புப்படம் 
 

சிலைகளை விற்க முயன்ற பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்ட பாஜக சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் அலெக்சாண்டர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி எனக்கூறி 5 கோடிக்குச் சிலைகளை விற்க முயன்றது தெரிய வந்துள்ளது. நடராஜர் சிலை உட்பட 7 சாமி சிலைகளை விற்க முயன்ற இந்த சம்பவத்தில் அந்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

அருப்புக்கோட்டை காவலர் இளங்குமரன், ஆயுதப்படை காவலர் நாக நாகேந்திரன், கருப்பசாமி ஆகியோருடன் சிலையை விற்க முயன்ற பாஜக நிர்வாகி அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கைது செய்யப்பட்ட அலெக்சாண்டரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் சிக்கினர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை ராமநாதபுரத்தில் 7 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்