Skip to main content

கொடைக்கானல் சாலையில் பெரிய  மரம் சாலையின் குறுக்கே விழுந்தது!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே பாறைகள் அதிகம் இருக்கும் பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த பழமையான பெரிய மரம் ஒன்று திடீரென சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. நல்வாய்ப்பாக அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது‌.

 

இந்த சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் கொடைக்கானல் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்தநிலையில் வத்தலக்குண்டு தீயணைப்புத் துறையினர், இரண்டு மணி நேரம் போராடி மரத்தை அகற்றினர். இதனைத் தொடர்ந்து தேவதானப்பட்டி காவல்துறையினர் மலைப்பாதையில் போக்குவரத்தைச் சீர் செய்தனர். சாலையில் மரம் விழுந்ததால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்