Skip to main content

பங்களாதேஷ் கொள்ளையர்கள் அட்டகாசம்! அச்சத்தில் கேரள மக்கள்!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
math


கேரளாவில் ஊடுருவியுள்ள பங்களாதேஷ் கொள்ளையா்களால் அந்த மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

கேரளாவில் மழை வெள்ளம் பாதிப்பின் போது முகாம்களின் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களின் வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அரங்கேறின. இந்த சம்வத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலன கொள்ளையா்கள் கேரளாவில் தங்கி வேலை செய்து வரும் பங்களாதேஷை சார்ந்தவா்கள் என்று கண்டறியப்பட்டது.

மேலும் கேரளாவில் தற்போது பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் வீடுகளில் கொள்ளையடிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட கொள்ளையா்கள் பங்களாதேஷில் இருந்து கேரளாவுக்கு ஊடுருவி இருப்பதாக போலீசாரிடமிருந்து தகவல் வெளியானது. அந்த கொள்ளையா்கள் தான் மாத்ருபூமி பத்திரிக்கையின் கண்ணூர் பதிப்பின் செய்தி ஆசிரியரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்து விட்டு கணவன் மனைவியை தாக்கியுள்ளனர்.

கண்ணூர் சிட்டி உருவாச்சால் பகுதியில் உள்ள வீட்டில் மாத்ருபூமியின் ஆசிரியர் வினோத் சந்திரா மற்றும் அவருடைய மனைவி சரிதா குமாரி இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு வினோத் சந்திரா கதவை திறந்ததும், முகமூடி அணிந்த கொள்ளையா்கள் 4 பேர் வீட்டுக்குள் புகுந்து கணவன் மனைவி இருவரின் வாயையும் துணியால் கட்டி போட்டு பலவந்தமாக தாக்கியுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் பணம், விலையுயா்ந்த இரண்டு செல்பேன் இருவருடைய ஏடிஎம் கார்டையும் எடுத்துக் கொண்டு இரண்டு மணி நேரத்துக்கு பிறகு அங்கிருந்து வெளியே சென்றதும் வந்து நின்ற கார் ஒன்றில் ஏறி கொள்ளையர்கள் தலைமறைவானர்கள்.

பின்னர் காலை 6 மணிக்கு பக்கத்தில் உள்ளவா்கள் வந்து வினோத் சந்திராவையும் மனைவியையும் கட்டை அவிழ்த்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சோ்த்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாநிலம் முமுவதும் உள்ள காவல்நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேலை செய்து வரும் பங்களாதேஷத்தை சோ்ந்தவர்களை பிடித்து விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து தனிப்படை போலிசும் களமிறக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓரே நாளில் பங்களாதேஷத்தை சார்ந்த பலர் தலைமறைவாகி விட்டனர் என்றும் கூறப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்