Skip to main content

ரோந்து காவலர்கள் மீது தாக்குதல்... சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

Attack on night patrol guards ... Investigation with CCTV footage!

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியிலிருந்த காவலர்களை மூன்று மர்ம நபர்கள் தாக்கிவிட்டுச் சென்ற நிலையில் அந்த மூன்றுபேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே முத்துசெட்டிப்பாளையம் பிரிவு பகுதியில் அவிநாசி காவல்நிலைய காவலர்கள் சிலர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்பொழுது மூன்று இளைஞர்கள் பதிவெண் இல்லாத பைக்கில் வந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது அந்த பைக்கை போலீசார் நிறுத்த முற்பட்ட பொழுது, மூவரும் தப்பிச்செல்ல முயன்றனர். ரோந்து காவலர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற நிலையில் அந்த பைக்கில் இருந்த ஒருவன் ரோந்துக்காவலர் அருண்குமாரை இரும்பு கம்பியால் தாக்கினான். பின்னர் மூன்று பேரும் தப்பிச் சென்றனர்.

 

ரோந்து போலீசார் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடும் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான நிலையில் அந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் அந்த மூன்று பேரையும் தேடி வருகின்றனர். ரோந்து காவலர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்