Skip to main content

சந்தேகம்! - காதலியை 'பிளேடால்' கீறிய காதலன்!

Published on 01/03/2021 | Edited on 02/03/2021

 

gh

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் துறையில், அரியலூர் மாவட்டம் டி. பழுவூர் கிராமப் பகுதியைச் சேர்ந்த பி.எஸ்.சி. தோட்டக்கலை பட்டயப் படிப்பு படிக்கும் 18 வயது மாணவி, தன்னுடன் படிக்கும் சக மாணவருடன் பேசியதைக் கண்ட ஆத்திரத்தில், திருச்சி லால்குடி தாலுகாவைச் சேர்ந்த காதலன் சேவியர் (வயது 30) அந்த மாணவியின் விடுதி முன்பு, மாணவியைக் கழுத்து, உடல் ஆகிய இடங்களில் பிளேடால் கீறிவிட்டு தானும் கையில் கீறிக் கொண்டார்.

 

இதனைப் பார்த்த சக மாணவிகள் கூச்சலிட்டனர். பின்னர், இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதன்பேரில், இருவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சம்பந்தமாக அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

சார்ந்த செய்திகள்