Skip to main content

“நான்லாம் ராவான ரவுடி...” - மதுபோதையில் இளம்பெண் அட்டகாசம் 

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Argument on the road in Erode intoxicated woman

 

ஈரோட்டில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் அட்டகாசம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பன்னீர்செல்வம் பூங்கா சாலையில் இளம்பெண் ஒருவர் மதுபோதையில் சாலையில் அமர்ந்து ரகளை செய்ததுடன் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்துள்ளார். 

 

இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுபோதையிலிருந்த பெண்ணிடம் வீட்டிற் போகும்படி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண் தொடர்ந்து போலீஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் துப்பட்டாவைக் கொண்டு கைகளை கட்டி ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்