Skip to main content

''அவரை பார்க்க யார்வேண்டுமானாலும் தாராளமாக வரலாம். ஆனால்...''-நிபந்தனை வைத்த பிரேமலதா விஜயகாந்த்!

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

"Anyone who wants to see him is welcome. But...''- Premalatha Vijayakanth made the condition!

 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் பிறந்தநாள் நாளை அக்கட்சியினர் மற்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இன்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது, ''நாளை விஜயகாந்த் தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகிறார். அவரை யாரெல்லாம் பிறந்தநாள் அன்று பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ தாராளமாக வரலாம். ஆனால் சந்தோசமாக வாங்க. அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை அவர் நலமாக இருக்கிறார். வயது, தொடர்ந்து ஏற்பட்ட உடல்நல பாதிப்பு அதனால் ஏற்பட்ட சோர்வுதான் காரணமே தவிர வேறொன்றும் இல்லை. அவரே அவரது வேலைகளைச் செய்துகொண்டு எங்களையும் வழிநடத்தி நமது இலக்கை அடைய தேவையான அறிவுரைகளைக் கொடுத்து வருகிறார். நமது முரசு நாளை அரசாக வந்தே தீரும்''என்றார்.

 

அண்மையில் 75 ஆவது சுதந்திர தின விழாவின் பொழுது தேசியக் கொடியேற்ற கட்சி அலுவலகத்திற்கு வந்த விஜயகாந்த்தின் உடல்நிலையைக் கண்டு அவரது கட்சியினர், ரசிகர்கள் கண்கலங்கி அழுத நிகழ்வுகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து நாளை அவரது பிறந்தநாள் அன்று யார் வேண்டுமானாலும் அவரை சந்திக்க வரலாம் ஆனால் சந்தோசமாக வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்