Skip to main content

வன்கொடுமை தடுப்புச் சட்டம் விவகாரம்: திமுக தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

Published on 16/04/2018 | Edited on 16/04/2018


வன்கொடுமை தடுப்புச் சட்டம் விவகாரம் தொடர்பாக திமுக தோழமைக் கட்சிகள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அண்மையில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. அதனை எதிர்த்து வடமாநிலங்களில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் பத்துபேர் பலியானார்கள். ஏராளமானவர்கள் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் காயமடைந்தார்கள்.

இந்நிலையில் வடமாநிலங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு, தலித் மக்கள் படுகொலை உள்ளிட்ட வன்கொடுமைகளைக் கண்டிக்கிற வகையிலும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்துக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மைய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தியும், வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை அரசியல் அமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வற்புறுத்தியும் திமுக தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் இந்த போராட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தோழமைக் கட்சிகளின் தலைவர்களான திருநாவுக்கரசர், கி.வீரமணி, வைகோ, பேராசிரியர் காதர்மைதீன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சார்ந்த செய்திகள்