Skip to main content

அதிசய பிறவி மாணவன் நெற்றிக்கண் தண்டபாணி !

Published on 24/01/2020 | Edited on 25/01/2020

புராண கதைகளில் சிவனுக்கு 3வது கண்ணாக நெற்றிக்கண் இருப்பதை படித்த நமக்கு கடவுளின் மீது அசாத்திய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் 3வது கண்ணாக அறிவுக்கண் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சியான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலையை அடுத்த கிருஷ்ணரைாயபுரம் அருகே உள்ள கோவக்குளம் ஜெயபால் ஒரு விவசாயி. இவருடைய மகன் தண்டாபணி பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறான்.

 

Amazing Student

 

பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் பயிற்சி வகுப்புகள் நடத்தி வரும் வேல்முருகன் என்பவரிடம் தண்டபாணி பயிற்சி வகுப்பு சேர்ந்துள்ளார்.  வேல்முருகனின் தனிப்பயிற்சி தண்டபாணி தனக்கு 3வது கண் இருப்பதை அறிந்து கொண்டுள்ளான்.  இதை தன் பள்ளி ஆசிரியர்களிடம் இதை பற்றி சொல்லும் போது அவர்கள் அனைவரும் அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் பார்த்திருக்கிறார்கள்.

தண்டபாணியை சோதித்து பார்ப்பதற்காக ஆசிரியர்கள் கண்களை கட்டிவிட்டு தண்டாபணி ஒவ்வொருத்தராக நிறுத்தி இவர் யார் என்று ஒவ்வொருவரையும் கேட்டிருக்கிறார்கள். தண்டபாணியே கண் திறந்து பார்ப்பதை போன்று மிகச்சரியா சொல்லி ஆசிரியர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளான்.

 

Amazing Student


இதே போன்று கண்களை கட்டிக்கொண்டு பாடபுத்தகத்தில் உள்ள எழுத்துக்கள், ரூபாய் நோட்டுகளில் உள்ள வரிசை எண்கள், விசிட்டிங் கார்டுகளில் உள்ள எழுத்துகள், சொல்போன்களில் உள்ள புகைப்படங்கள், என அனைத்தையும் கண்களை கட்டிக்கொண்டு நேரில் பார்ப்பதை பார்த்து சொல்ல தண்டபாணியை நெற்றிக்கண் தண்டாபணி என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

 

Amazing Student

 

இது குறித்து பயிற்சியாளர் வேல்முருகன் முறையான பயிற்சி எடுத்தால் படிப்பில் ஆர்வம் பிறக்கும், நல்ல எண்ணம், நல்ல ஒழுக்கம்,வளர்ந்து இது போன்ற அதிசயங்கள் நடக்க சாத்திய முள்ளது என்றார்.

இரண்டு கண்களை கட்டி நெற்றிக்கண் என்னும் அறிவுக்கண்களில் பார்த்து சொல்லும் தண்டபாணி தற்போது அதிசய பிறவியே !

 


 

சார்ந்த செய்திகள்