Skip to main content

ஜெ., விசாரணை ஆணையத்தில் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி ஆஜர்!

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
ADjp


ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என  பல்வேறு தரப்பினரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.

ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன்ராவ் மற்றும் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பதில் அளித்தனர்.

இதுபோன்று பலர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி நேரில் விளக்கம் அளித்து வந்தநிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் சி.பி.சி.ஐ.டி.யின் ஏ.டி.ஜி.பி. அமரேஷ் புஜாரி இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபொழுது உளவு துறை ஐ.ஜி.யாக இருந்துள்ளார்.
 

tripa


முன்னதாக நேற்றைய தினம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் தலைவர் திரிபாதி விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

சார்ந்த செய்திகள்

Next Story

''ஜெ.வையே மிரள வைத்தவர் பேராசிரியர் அன்பழகன்''-ஜவாஹிருல்லா  பேச்சு

Published on 18/12/2022 | Edited on 18/12/2022

 

nn

 

பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் மு.ஹி.ஜவாஹிருல்லா பேசுகையில், ''இவர் தனது பெயருக்கு முன்னால் பேராசிரியர் பேராசிரியர் என்று போட்டுக் கொள்கிறார். ஆனால் ஆவணங்களைப் பார்க்கும் பொழுது இவர் உதவி பேராசிரியர்தான். அசிஸ்டன்ட் ப்ரொபஸர் தான் என்று ஜெயலலிதா பேசியுள்ளார். அப்பொழுது வீரமாக எழுந்து நின்ற பேராசிரியர் 'ஆம் உண்மைதான். நான் உதவி பேராசிரியர் தான். என்னுடைய கட்சிக்காரர்கள், என்னுடைய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என்னை பேராசிரியர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஒன்றை நான் கேட்க விரும்புகின்றேன். 

 

இந்த சபையில் உறுப்பினராகி முதலமைச்சராக ஆகக் கூடிய அளவிற்கு இருக்கக்கூடியவர்கள் கடந்த காலம் செய்த தொழில்களை தங்களின் பெயர்களுக்கு முன்னால் போட்டுக் கொள்ள முடியுமா? அதைப் பற்றி நான் பேசினால் இந்த அரங்கம் தாங்குமா? என்று சொன்னார். ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக, மேலவை உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அவருடைய பங்களிப்பு மிகப்பெரிய பங்களிப்பாக இருந்தது. பேராசிரியர் கலைஞரைப் போன்று காலையிலேயே எழுந்தவுடன் பத்திரிகைகளை படித்து விடுவார். ஏறத்தாழ 8 நாளிதழ்களை படித்துவிட்டு குறிப்புகள் எல்லாம் எடுத்துக் கொண்டு பத்திரிகை செய்திகளில் வரலாற்றுப் பிழை எதுவும் இருந்தால் உடனடியாக குறிப்பிட்ட பத்திரிகையை அழைத்து நீங்கள் ஒரு வரலாற்று பிழை செய்திருக்கிறீர்கள் என்று சுட்டிக் காட்டுவார். கலைஞரும், பேராசிரியர் அன்பழகனும் காலையிலேயே பத்திரிகைகளை படித்ததன் காரணமாக இருவரும் கருத்து பரிமாற்றத்தை செய்து மக்களுக்கு அற்புதமான செய்திகளை எடுத்துச் சொன்னார்கள்'' என்றார்.

 

Next Story

ஜெ.கெட் அப்பில் மீண்டும் கிருஷ்ணப்பிரியா! அதிமுகவில் பர பர!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

சசிகலாவின் அண்ணி இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா.  சசிகலா, இளவரசி போல போயஸ் தோட்டத்திலே இருந்த கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் சசிகலா - இளவரசி சிறைக்கு சென்றதையடுத்தும் சென்னையில் தனது பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணப்பிரியா, தினகரனுக்கு எதிரான அரசியலை செய்து வருகிறார். 

 

k

 

அடிக்கடி பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவையும்,  இளவரசியையும் சந்தித்து விவாதிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கிருஷ்ணப்பிரியா தினகரனை தீயசக்தி என விமர்சனம் செய்து வரும் கிருஷ்ணப்பிரியா, ஜெ.மறைவையடுத்து அவரைப் போலவே சிகை அலங்காரம், உடை அலங்காரம் செய்துகொண்ட தனது புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

 

 

அவரது தோற்றம் அதிமுக அரசியலில் அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் கிருஷ்ணப்பிரியா,  தற்போது மீண்டும் ஜெ.கெட் அப்பில் தோற்றமளிக்கும் புதிய படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார். கிருஷ்ணப்பிரியாவின் இந்த தோற்றம் அதிமுகவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.