Skip to main content

''இவர்கள் தலைமையில்தான் அதிமுக தேர்தலை சந்திக்கும்'' - கடம்பூர் ராஜு பேட்டி!

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

 '' AIADMK will face elections under their leadership '' - Kadampur Raju interview!

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என வியூகங்கள் வெளியாகி வரும் நிலையில், சென்னை தி.நகரில் தங்கியுள்ள சசிகலாவை இன்று (12.02.2021) சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும், காலம் அவர்களுக்குப் பதில் சொல்லும்'' என்றார்.

 

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு,  அதிமுகவைப் பற்றி பேசாமல் திமுக தேர்தலைச் சந்திக்க முடியாது. அதிமுக பாசிட்டிவாக வாக்கு கேட்கிறது. திமுக நெகட்டிவாக வாக்கு கேட்கிறது. ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில்தான் அதிமுக தேர்தலைச் சந்திக்கும் எனக் கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்