Published on 29/04/2021 | Edited on 29/04/2021
![AIADMK ex-minister Aranganathan passes away](http://image.nakkheeran.in/cdn/farfuture/A3S2hrkOL-y7QorTuX5l-DrTCiljn0CmLrb7-F9WpJA/1619696953/sites/default/files/inline-images/6796797.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம்சென்னையில் காலமானார். கோவை தொண்டாமுத்தூர், கோவை மேற்கு தொகுதியில் இருந்து 2 முறை எம்.எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட அரங்கநாயகம் அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். 95 வயதான அரங்கநாயகம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.